அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
- அங்கன்வாடி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
- மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
திருச்சுழி
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, நரிக்குடி ஒன்றி யங்களில் உள்ள 40-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்களில் 150-க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சுழி, நரிக்குடியில் உள்ள குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவி யாளர்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பாண்டியம்மாள்,சி.ஐ.டி.யு. தலைவர் சாராள், ஒன்றிய கன்வீனர் சுரேஷ் குமார், அங்கன்வாடி ஊழியர்கள் சங்க நிர்வாகி இந்திராணி ஆகியோர் கலந்துகொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன உரையாற்றினர்.
மேலும் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் மற்றும் சி.ஐ.டி.யு. சங்கத்தினர் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் திரளாக கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.