உள்ளூர் செய்திகள்

கலெக்டர் ஜெயசீலன் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடினார்.

அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடல்

Published On 2023-09-13 07:01 GMT   |   Update On 2023-09-13 07:01 GMT
  • விருதுநகரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் கலந்துரையாடினார்.
  • உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டத்தில் பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் கல்வி, பொது அறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்ப டையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட கலெக்டர் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, 35-வது முறையாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சிவகாசி, விருதுநகர் மற்றும் சாத்தூர் ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த பல்வேறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கி வரும் அரசு மற்றும் அரசு உதவி பெறும், 36 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள் ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது, அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தே கங்களை அகற்றி, வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்பதெல்லாம், வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.

இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், உயர்கல்வி பயில விரும்பும் கல்லூரி மற்றும் இடம் உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார்.

Tags:    

Similar News