விலைவாசி, வரி உயர்வு: தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிப்பு
- விலைவாசி, வரி உயர்வால் தி.மு.க. ஆட்சியில் அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
- கே.டி.ராஜேந்திரபாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.
சிவகாசி
சிவகாசி அருகே சாட்சி யாபுரத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா பிறந்த நாள் விழா, மதுரையில் நடந்து முடிந்த அ.தி.மு.க. மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மான சாராம்சத்தின் விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டதிற்கு ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும் அ.தி.மு.க. தெற்கு ஒன்றிய செயலா ளருமான லட்சுமி நாரா யணன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, வெங்கடேஷ், மாநகர பகுதி செயலாளர்கள் கிருஷ்ண மூர்த்தி, சரவண குமார், கருப்பசாமி பாண்டியன், சாம் என்ற ராஜா அபினேஸ்வரன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேசிய தாவது:-
கள்ளுக்கடைகளும், சாராயக்கடைகளும் திறக்கப்பட அடிப்படை காரணம் தி.மு.க. தான். கடந்த 2 ஆண்டு கால ஆட்சியில் மது கடை களையும் மூடவில்லை, மிகப்பெரிய திட்டங்கள் எதையும் செயல்படுத்த வில்லை. புதிய திட்டங்க ளையும் அறிவிக்கவில்லை.
கடந்த கால எம்.ஜி.ஆர். , ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி களில் ஏழை-எளிய மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்கள் செயல்ப டுத்தப்பட்டு, தமிழகத்தை முன்னேற்ற பாதையில் கொண்டு சென்று பொற்கால ஆட்சி நடத்தப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் அனைத்து மதத்தினர்களும் புனித யாத்திரை மேற்கொள்ள கோடிக் கணக்கான ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. மாணவ- மாணவிகளுக்கு விலை யில்லா மடிக்கணினி, மிதிவண்டி அதேபோன்று மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர் போன்றவை வழங்கப்பட்டது.
நீட் தேர்வை ஒழிக்க முடியாது என்பதற்காக அரசு பள்ளி மாணவ- மாணவிகளுக்கு மருத்துவக் கல்லூரிகளில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு 6 ஆயிரம் டாக்டர்கள் உருவாகி உள்ளனர். தி.மு.க. ஆட்சியில் வியாபாரிகள், தொழிலா ளர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிப்ப டைந்து, விலைவாசி உயர்வு, வரி உயர்வால் பொது மக்களும் பாதிக்கப் பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்ட த்தில் தலைமை கழக பேச்சாளர் பலகுரல் சந்தானம், சாத்தூர் முன்னாள் எம்.எல்.ஏ. ராஜவர்மன், விருதுநகர் மாவட்ட முன்னாள் இந்து சமய அறங்கா வலர் குழுத் தலைவர் பல ராம், மாமன்ற உறுப்பினர் கரை முருகன், சிவகாசி ஒன்றிய கழக துணை செயலாளர் இளநீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.