உள்ளூர் செய்திகள்

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகளை கலெக்டர் மேகநாதரெட்டி பார்வையிட்டு பயனாளிக்கு ஒப்புகை ரசீது வழங்கினார்.

வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணி

Published On 2022-08-21 08:15 GMT   |   Update On 2022-08-21 08:15 GMT
  • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிக்கு ஒத்துழைப்பு தரவேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்தார்.
  • வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

விருதுநகர்

விருதுநகர் மாவட்டம், பெரிய பேராலி சாலையில் உள்ள குலோபல் பாலிபேக்ஸில் வாக்காளரது விபரங்களுடன் ஆதார் எண்ணைப் பெற்று இணைக்கும் பணி நடந்தது. இதை கலெக்டர் மேகநாத ரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-

வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் தூய்மையாக்குதல், வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வாக்காளர்களின் அடையாளத்தை உறுதிபடுத்துதல், ஒரு நபரின் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இடம் பெறுதல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் இடம் பெறுதலை தவிர்த்தல், சிறப்பான வாக்காளர் சேவைகளை வழங்குதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் மக்கள் பிரதிநிதித்துவ சட்ட திருத்தங்களின்படி, வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரிடமிருந்தும் அவர்களது ஆதார் எண்ணைப் பெற்று வாக்காளரது விபரங்களுடன் இணைக்கும் பணி கடந்த 1-ந் தேதி முதல் தொடங்கிநடைபெற்று வருகிறது.

வாக்காளர்கள் தாங்களாகவே ஆதார் எண்ணை https://www.nvsp.in/என்ற இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்காளர் உதவி செயலி (Voters helpline App) வாயிலாகவோ வாக்காளர் பட்டியிலுள்ள விபரங்களுடன் இணைக்கலாம்.

மேலும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக வீடு வீடாகச் சென்று படிவம்-6பி –ல் வாக்காளர்களது ஆதார் எண்ணை பெற்று இணைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் தங்கள் பகுதிக்குட்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், உதவி வாக்காளர் பதிவு அலுவலரது அலுவலகம், வாக்காளர் உதவி மையம் மற்றும் பொது இ-சேவை மையங்களிலும் ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் இணைத்துக் கொள்ளலாம்.

வாக்காளர்கள் அளிக்கும் ஆதார் எண் பொது வெளியில் எக்காரணம் கொண்டும் காட்சிப்படுத்தப்ப–டமாட்டாது.

ஆதார் விபரங்கள் ஆதார் ஆணையத்தின் உரிமம் பெற்ற சேமிப்பகத்தில் மட்டுமே சேமிக்கப்படவுள்ளது. இதன் மூலம் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து இணையதளம் வாயிலாகவோ அல்லது வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக படிவம்- 6பி–ல் தங்களது ஆதார் விபரத்தினை வாக்காளர் பட்டியலுடன் இணைத்து தூய்மையான, வாக்காளர் பட்டியலினை தயார் செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது, அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் கல்யாணகுமார், விருதுநகர் வட்டாட்சியர் செந்தில்வேல், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News