உள்ளூர் செய்திகள்
குற்றாலத்தில் தி.மு.க. சார்பில் 120 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
- 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
- நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தி.மு.க. விவசாய அணி நெல்லை மண்டல கலந்துரையாடல் கூட்டம் குற்றாலத்தில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் ஏற்பாட்டில் 120 பயனாளிகளுக்கு விவசாய உபகரணங்கள், தென்னங்கன்றுகளை மாநில விவசாய அணி செயலாளரும் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதியான ஏ.கே.எஸ்.விஜயன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் செயற்குழு உறுப்பினர் செல்லத்துரை, பொதுக்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, கடையம் தெற்கு ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், குற்றாலம் பேரூர் செயலாளர் சங்கர் என்ற குட்டி, நகர செயலாளர் வெங்கடேஷ், பொருளாளர் ஷெரீப், மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் குற்றாலம் சுரேஷ், டேவிட் முருகன், பிச்சையா, சொக்கம்பட்டி முருகன், மதுரை சுப்பிரமணியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.