உள்ளூர் செய்திகள்
வீடு இடிந்து விழுந்து பெண் காயம்
- சாரல் மழை கடந்த சில நாட்களாக விட்டு விட்டு பெய்து வந்தது.
- வீட்டின் சுவர் இடிந்து விழுந்து பத்மா என்ற பெண் காயம் அடைந்தார்.
கும்பகோணம்:
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார் கோவில் செம்மங்குடி மேலத் தெருவில் அரசால் கட்டித் தரப்பட்ட தொகுப்புவீடுகள் உள்ளன. சாரல் மழை விட்டு விட்டு கடந்த சிலநாட்களாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு பத்மா (வயது50) என்பவருடைய தொகுப்பு வீட்டின் சுவர்திடீரென இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி பத்மா காயம் அடைந்தார்.
அவரை மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் தொகுப்பு வீடுகளின் நிலை குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து தகுதி இல்லாத தொகுப்பு வீடுகளை இடித்து, புதிதாக வீடு கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.