உள்ளூர் செய்திகள்
- வீட்டைவிட்டு வெளியே சென்ற இளம்பெண் வீடு திரும்பவில்லை.
- புகாரின்பேரில் போலீசார் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகில் உள்ள பங்காளபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் பாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி (வயது27) என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.
சம்பவத்தன்று ராஜேஸ்வரி வீட்டை விட்டு வெளியேறி பழனியில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் அதன்பிறகு மாயமானார்.
இது குறித்து அவரது கணவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் போலீசார் அவரை தேடி வருகின்றனர்.