நாங்குநேரி அருகே 2 குழந்தைகளுடன் இளம்பெண் மாயம்
- ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
- முத்துபாரதி தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
களக்காடு:
நாங்குநேரி அருகே உள்ள இரைப்புவாரி புதுக்குளத்தை சேர்ந்தவர் ஜெயகணேஷ். இவரது மனைவி முத்துபாரதி (வயது 25). இவர்களுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர்.
ஜெயகணேஷ் தனது மனைவி குழந்தைகளுடன் மும்பையில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன் முத்துபாரதி தனது குழந்தை களுடன் புதுக்குளத்தில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்தார்.
மாயம்
கடந்த 28-ந் தேதி இரவில் முத்துபாரதி பெற்றோர் வீட்டில் குழந்தைகளுடன் படுத்து தூங்கி கொண்டிருந்தார். மறுநாள் காலையில் பார்த்த போது முத்துபாரதி மற்றும் அவரது 2 குழந்தை களையும் காணவில்லை.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ரகுராஜ் (50) நாங்குநேரி போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆதம் அலி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி குழந்தைகளுடன் மாயமான இளம்பெண் முத்து பாரதியை தேடி வருகிறார்.