உள்ளூர் செய்திகள்

சின்னசேலத்தில் கல்லூரி மாணவியை மிரட்டிய வாலிபர் கைது

Published On 2023-09-14 12:34 IST   |   Update On 2023-09-14 12:34:00 IST
  • சங்கரி வெங்கடேசன் என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
  • நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் சவுந்தர்யா நகரை சேர்ந்தவர் வெங்கடேசன். இவருடைய மகள் மோகன சங்கரி (வயது 22). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் மேல் பட்டப்ப டிப்பு 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர், அதே பகுதியை சேர்ந்த சரவணன் என்பவரது மகன் வெங்கடேசன் (22) என்பவருடன் நட்பாக பழகி வந்துள்ளார். நாளடை வில் வெங்கடேசனின் நடவடி க்கை பிடிக்காததால் அவரிடமி ருந்து மோகனசங்கரி விலகி னார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த முருகேசன் மகன் நாகராஜ் என்பவருடன் மோகன சங்கரிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதனை அறிந்த வெங்கடேசன் தொடர்ந்து அந்த பெண்ணுக்கு தொந்தரவு கொடுத்ததாகவும், பெண்ணின் புகைப்படத்தை மார்பிங் செய்து நெட்டில் விட்டு விடுவேன் என கூறி மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து மோகனசங்கரி கொடுத்த புகாரின் பேரில் சின்ன சேலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்தனர்.

Tags:    

Similar News