null
- புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.
- புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்.
மோகம் முப்பது நாள்..
ஆசை அறுபது நாள் என்பார்கள்.
அது ஏன்?
திருமணம் பண்ணிப்பார்..
தொண்ணூறு நாட்கள் வரை புது பொண்ணு மாப்பிள்ளையாக வலம் வரலாம்.
உலக அழகியே மனைவி என்றாலும்..
உலகத்தின் ஆணழகனே புருஷன் என்றாலும்..
ஒரு கட்டத்திற்குப் பிறகு தெவட்ட தான் செய்யும்.
ஏனெனில் பழக பழக பாலும் புளித்து தயிர் ஆக தான் செய்யும்.
புளித்து தயிர் ஆனாலும் பொறுத்திருந்தால்
தயிர் வெண்ணெய் ஆகி..
இறுதியாக மணக்கும் நெய் ஆகும்.
இதனால் காதல் குறைந்து விட்டதே என்று மனம் வருந்தாமல் அன்போடு நடந்து கொண்டால் நெய் போல தாம்பத்யம் மணக்கும்.
புருசனுக்கும் பொண்டாட்டிக்கும் சின்ன சின்ன சண்டை வரத்தான் செய்யும்.
அதை பூதாகரமாக்கி டைவர்ஸ் வரைக்கும் இழுத்துட்டு போய் விடுவதென்னவோ இரு வீட்டில் உள்ள பெற்றோர்களும் உறவினர்களுமே.
புருஷன் பொண்டாட்டின்னா சண்டைலாம் வரத்தான் செய்யும்.. அது உங்க பாடுன்னு கண்டுக்காம போறதுதான் நல்ல பெற்றோருக்கு அழகு.
-பிரியங்கா