கதம்பம்
null
- வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள்.
- சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான்.
உருவத்தைப் பார்த்து எடை போடலாமா?
கூடாது. அதற்கு இந்த வரலாற்று சம்பவம் சாட்சி..
''1911-ம் ஆண்டு வியட்நாமை ஆக்கிரமித்த பிரஞ்சுப் படைகள், 'கலகம் செய்தார்கள்' என்று ஆசிரியர் குடும்பம் ஒன்றைக் கூண்டோடு வண்டியில் அள்ளிக் கொண்டுபோய் கொலை செய்தது.
வண்டியில் இடம் இல்லாததால், ஒல்லியாகவும் பார்க்கப் பரிதாபமாகவும் இருந்த அந்த ஆசிரியரின் மகனை அப்படியே விட்டுவிட்டு, 'இவன் தானாகவே செத்துவிடுவான்' என்று கிண்டல் செய்துவிட்டுச் சென்றனர்.
பிற்காலத்தில் அந்தச் சிறுவன் பிரஞ்சுப் படைகளையும் மன்னராட்சியையும் ஒழித்துக்கட்டி மாபெரும் கதாநாயகனாக உயர்ந்தான். அமெரிக்கப் படைகளை புறமுதுகிட்டு ஓடச் செய்தான். அந்தச் சிறுவனின் பெயர் ஹோசிமின்!'
-அழகு கூத்தையா