கதம்பம்
பிரமிடுகளின் மறுபக்கம்

பிரமிடுகளின் மறுபக்கம்

Published On 2025-03-28 11:37 IST   |   Update On 2025-03-28 11:37:00 IST
  • பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
  • பிரமிடுகள் கட்டப்படும் போது அந்த இடங்கள் நைல்நதி பாசன விளைநிலமாக இருந்தது.

எகிப்திய பிரமிடுகள் உலகப் புகழ்பெற்றவை ஆகும். செங்கல் மற்றும் பாறைகளால் கட்டப்பட்ட இவற்றில் சில உலகின் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாக இருக்கிறது. இது பண்டைய உலக அதிசயங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.

எகிப்திய மன்னர்கள் "பரோக்" என்றழைக்கப்பட்டார்கள். நாகரீகம் வளராத ஆரம்ப காலங்களில் மன்னரையே கடவுளாக எதிப்தியர்கள் கருதினார்கள். மன்னர் இறந்தபின் அவர் மறுபடியும் பிறப்பார் என்று நம்பினார்கள்.

அதனால் அவர் மறுபடியும் பிறந்து மறு உலகிற்கு செல்லும்பொழுது அங்கு வாழ இந்த உடல் தேவை என்பதால் அதனை அழிக்காமல் பதப்படுத்தி பிரமிடுகளில் பாதுகாத்து வந்தனர். அத்துடன் அவருக்குத் தேவையான அத்தனை பொருள்களையும் பிரமிடுகளின் உள்ளே கொண்டுவந்து குவித்தனர்.

அன்று பிரமிடுகளுக்காக சுரண்டப்பட்ட கனிம வளங்களால் இயற்கைவளம் குன்றி எகிப்தே பாலைவனமானது.

பிரமிடுகள் கட்டப்படும் போது அந்த இடங்கள் நைல்நதி பாசன விளைநிலமாக இருந்தது.

பிரமிடுகளின் பிரமாண்டம், பிரமிடுகளின் உள்ளே கொட்டிக்கிடந்த பொற்குவியலையும் பொருள்களின் குவியலையும் பார்த்தாலே எகிப்தின் அன்றய பொருளாதாரம் புரியும்.

இயற்கை வளத்தை பிரமிடுகளுக்காக சுரண்டப்பட்டதால் குறிப்பாக கற்களுக்காக மலைகளை வெட்டி டன் கணக்கில் பாறைகளை பெயரத்தெடுத்து பிரமிடுகளாக அடுக்கியதன் விளைவு, தட்பவெப்ப நிலை மாறியது. வறட்சியால் எகிப்தின் பெரும்பகுதி பாலைநிலமானது. எகிப்துக்கு உலகப் புகழைப் பெற்றுத்தந்த பிரமிடுகளே அந்நாட்டின் அழிவுக்கும் காரணமாக அமைந்தது.

-நடராசன் இராமநாதன்

Tags:    

Similar News