
- ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
- நீலகிரி மலைக் காடுகள் இந்தக் காடுகள் பல்லுயிர்கள் வாழும் இடமாக உள்ளன.
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஐந்து காடுகள்...
1. மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தரவனக் காடுகள்... இந்தக் காடுகளில் தான் அதிகமாக புலிகள் வாழ்கிறது. இது பசுமை மாறா காடுகளாகும். இந்த காடுகளை ஒட்டிய ஆற்றுப்பகுதியில் தான் அதிகமாக சணல் பயிரிடப்படுகிறது.
2. மேகாலயா ஷில்லாங் பகுதிகளில் உள்ள மோப்லாக் டேக் ரெஸ்ட் காடுகள்... வடகிழக்கு இந்தியாவில் உள்ள பசுமை மாறா காடுகள். இவை உலகிலேயே அழகான அருவிகளைக் கொண்டவை.
3. தமிழ்நாட்டில் சிதம்பரம் அருகில் பிச்சாவரத்தில் உள்ள மாங்குரோவ் சதுப்பு நிலக்காடுகள் இவை 25 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பறந்து விரிந்து காணப்படுகிறது... ஆசியாவிலேயே இரண்டாவது மிகப்பெரிய சதுப்பு நிலக்காடுகள் தமிழ்நாட்டில் தான் உள்ளன.
4. குஜராத் மாநிலத்தில் உள்ள கிர் காடுகள் இந்தியாவிலேயே இந்தக் காடுகளில் மட்டும்தான் சிங்கம் வாழ்கின்றன.
5. நீலகிரி மலைக் காடுகள் இந்தக் காடுகள் பல்லுயிர்கள் வாழும் இடமாக உள்ளன. நீலகிரி மலைக் காடுகள் 100 சதுர கிலோ மீட்டருக்கு மேல் பரந்து விரிந்து காணப்படுகின்றன.
-வீர.அறிவொளி