செய்திகள்

பிளிப்கார்ட் ரிட்டர்ன் கொள்கையில் மாற்றம்: கால அளவு 30 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைப்பு

Published On 2016-06-06 16:12 IST   |   Update On 2016-06-06 16:12:00 IST
இந்தியாவின் முன்னணி இ-காமர்ஸ் நிறுவனமான பிளிப்கார்ட் தன்னிடம் வாங்கப்பட்ட முக்கிய பொருட்களை திருப்பி அளிப்பதற்கான கால அளவை 30 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
பெங்களூர்:

இந்தியாவில் இணைய வர்த்தகம் வேகமாக வளர்ந்து வருகிறது. முக்கியமாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் அதிக அளவில் வாங்கப்படுகின்றன. இத்தகைய வர்த்தகத்தில் பிளிப்கார்ட், அமேசான், சினாப்டீல் போன்ற இ-காமர்ஸ் நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

இந்நிலையில் பிளிப்கார்ட் நிறுவனம் பொருட்களை திருப்பி அளிப்பதற்கான கால அளவை 30 நாட்களில் இருந்து 10 நாட்களாக குறைத்துள்ளது. வாடிக்கையாளர்கள் அதிக அளவிலான பொருட்களை திருப்பி அனுப்புவதாலும், பொருட்களை திரும்ப வாங்குவது மற்றும் கொடுப்பதில் ஏற்பட்ட குழப்பத்தாலும் மேற்குரிய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இதன் மூலம் பிளிப்கார்டில் அதிகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், புத்தகம் ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் திருப்பி அளிக்க விரும்பினால், அவற்றை 10 நாட்களுக்குள் திருப்பி அளிக்க வேண்டும்.

ஆனால் ஆடை, காலணி, கடிகாரங்கள் மற்றும் கண்ணாடிகள், நகை மற்றும் பேஷன் பொருட்கள் மற்றும் பெரிய உபகரணங்கள் போன்றவற்றை திருப்பி அளிக்க 30 நாள் என்ற பழைய கொள்கை தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது.

Similar News