செய்திகள்

ஜார்கண்டில் மதிய உணவு சாப்பிட்ட 96 குழந்தைகளுக்கு வயிற்று வலி: மருத்துவமனையில் அனுமதி

Published On 2016-06-06 23:59 IST   |   Update On 2016-06-06 23:59:00 IST
ஜார்கண்ட் மாநிலத்தில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் 96 பேர் வயிற்று வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ராஞ்சி:

ஜார்கண்ட் மாநிலம் ஜமுயாவில் அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 96 குழந்தைகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உணவு சாப்பிட்ட உடன் குழந்தைகள் வயிறு வலிப்பதாக புகார் அளித்துள்ளனர். சிலருக்கு குமட்டலும் ஏற்பட்டுள்ளது.

குழந்தைகள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உணவு தயாரித்த போது அதில் பல்லி விழுந்ததாக கூறப்படுகிறது.

”இதில் பலர் முதலுதவி அளித்த உடன் குணமடைந்தனர். 5 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது” என்று ஜமுயா சமுதாய நலக் கூட மையத்தின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.

முன்னதாக உத்தர பிரதேசம் மாநிலம் மதுராவில் மே மாதத்தில் மதிய உணவில் பால் அருந்திய இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர். 15-க்கும் அதிகமான குழந்தைகள் பாதிக்கப்பட்டனர்.

அதேபோல், கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிர மாநிலம் பல்கர் மாவட்டத்தில் மதிய உணவு சாப்பிட்ட 50 மாணவர்களுக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டது.

Similar News