செய்திகள்
திருப்பதியில் மே மாதத்தில் 1 கோடி லட்டு விற்பனை செய்து சாதனை
திருப்பதியில் இந்தாண்டு மே மாதம் 1 கோடிக்கு மேல் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது வரலாற்றுச் சாதனையாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருப்பதி:
திருப்பதியில் கோடை விடுமுறையில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் வருவது வழக்கம். தற்போது பள்ளி, கல்லூரித் தேர்வு முடிவுகள் வெளிவந்துள்ளன. அதனுடன் கோடை விடுமுறையும் முடிவுற்ற நிலையில் கடந்த 3 வாரங்களாக திருப்பதிக்கு பக்தர்கள் அதிக அளவில் வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதியில் உள்ள அனைத்து காத்திருப்பு அறைகளும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. தர்ம தரிசன பக்தர்கள் தரிசனத்துக்கு 15 மணி நேரம், நடை பாதை பக்தர்கள் தரிசனத்துக்கு 6 மணி நேரம், ரூ.300 விரைவு தரிசன பக்தர்கள் தரிசனத்துக்கு 3 மணி நேரம் ஆகிறது.
இந்த தரிசன நேரம் சனி, ஞாயிறு வார இறுதி நாள்களில் மேலும் அதிகரிக்கிறது. தற்போது தினசரி சராசரியாக 90 ஆயிரம் பக்தர்கள் ஏழுமலையானை தரிசித்து வருகின்றனர். இன்று காலையிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக உள்ளது.
கடந்த மே மாதம் மொத்தம் 25 லட்சத்து 8 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மானிய விலையில் ரூ.20-க்கு வழங்கப்பட்ட 2 லட்டுகள், பாதயாத்திரையாக நடந்து வந்த திவ்ய தரிசன பக்தர்களுக்கு வழங்கப்பட்ட ஒரு லட்டு, முதியோர், மாற்றுத்திறனாளிகள், ஒரு வருட கைக்குழந்தையுடன் வரும் பெண் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட லட்டுகள், கூடுதல் லட்டாக ரூ.50-க்கும் 2 லட்டுகள், ரூ.100-க்கும் 4 லட்டுகள் என மொத்தமாக பக்தர்களுக்கு 1 கோடிக்கு மேல் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. அதில், கடந்த மே மாதம் 28-ந்தேதி மட்டும் ஒரேநாளில் 4 லட்சத்து 5 ஆயிரம் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2013-ஆம் ஆண்டு மே மாதம் 72 லட்சத்து 33 ஆயிரம் லட்டுகளும், கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம் 80 லட்சத்து 64 ஆயிரம் லட்டுகளும், 2015-ஆம் ஆண்டு மே மாதம் 89 லட்சத்து 84 ஆயிரம் லட்டுகளும், விற்பனையாகி இருந்தது. இந்தாண்டு மே மாதம் 1 கோடிக்கு மேல் லட்டுகள் வினியோகம் செய்யப்பட்டு உள்ளது வரலாற்றுச் சாதனையாகும் என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.