செய்திகள்

இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்: 4 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது

Published On 2016-07-23 12:21 IST   |   Update On 2016-07-23 13:34:00 IST
வன்முறை சம்பவங்களால் பாதிக்கப்பட்டுள்ள ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக ஆய்வு செய்வதற்காக மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் இன்று காஷ்மீர் செல்லும் நிலையில் இங்குள்ள நான்கு மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
ஸ்ரீநகர்:

மாநிலத்தின் பல பகுதிகளில் அமைதியான இயல்பு நிலை நீடிப்பதால் காஷ்மீரின் பண்டிப்போரா, பாரமுல்லா, பட்காம், கண்டேர்பால் மாவட்டங்களில் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்கு உத்தரவு இன்று தளர்த்தப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும், போலீஸ் சட்டப்பிரிவு 144-ன்படி நான்குக்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக், குல்காம், குப்வாரா, புல்வாமா, சோபியா ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News