செய்திகள்

இந்த ஆண்டின் 12-வது மரணம்: கோட்டாவில் மேலும் ஒரு ஐ.ஐ.டி. பயிற்சி மாணவர் தற்கொலை

Published On 2016-07-23 15:29 IST   |   Update On 2016-07-23 15:29:00 IST
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐ.ஐ.டி. பயிற்சி மையத்தில் படித்து வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோட்டா:

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் ஐ.ஐ.டி. பயிற்சி மையத்தில் படித்து வந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்டது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஐ.ஐ.டி. மற்றும் ஜெ.இ.இ. தேர்வுக்காக தயாராகும் மாணவர்கள் மற்றும் தேர்வு எழுதிய மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வது இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள ஐ.ஐ.டி. பயிற்சி மையத்தில் படித்து வந்த மாணவன் பிரின்ஸ் குமார் சிங் இந்திரா விகாரில் உள்ள தனது விடுதி அறையில் நேற்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.

பீகார் மாநிலம் மோதிஹரி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ் குமார் சிங், பொறியியல் நுழைவுத் தேர்வு எழுத இருந்தார். இதற்கு பயிற்சி பெறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் கோட்டாவில் உள்ள பயிற்சி மையத்தில் சேர்ந்துள்ளார். கடைசியாக நேற்று இரவு அவரது பெற்றோரிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் தனது அறையில் உள்ள மின் விசியில் தூக்கு மாட்டி தன் உயிரை மாய்த்துள்ளார்.

இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் விடுதிக்கு வந்து மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது அறையில் தற்கொலைக் குறிப்பு எதுவும் கைப்பற்றப்படவில்லை. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து, பயிற்சி மையம் மற்றும் விடுதியில் உள்ள சக மாணவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த ஆண்டு இதுவரை 12 ஐ.ஐ.டி. பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Similar News