செய்திகள்

ரத்தம் ஏற்றியதன் மூலம் மராட்டியத்தில் 182 பேருக்கு எய்ட்ஸ் பாதிப்பு: மந்திரி தீபக் சாவந்த் அதிர்ச்சி தகவல்

Published On 2016-07-26 08:52 IST   |   Update On 2016-07-26 08:52:00 IST
ரத்தம் ஏற்றியதன் மூலம் மராட்டியத்தில் 182 பேர் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானார்கள்” என்ற மந்திரி தீபக் சாவந்த் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார்.
மும்பை:

நாட்டில் ரத்தம் ஏற்றியதன் மூலம் 2,234 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இதில் மராட்டியத்தில் மட்டும் 276 பேர் அடங்குவர் என்றும் ஊடகங்களில் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.

இதனை நேற்று மேல்-சபையில் சுட்டிக்காட்டிய தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் பிரகாஷ் கஜ்பியே, எந்த ரத்த வங்கிகள் இந்த ரத்தம் ஏற்றும் பணியில் ஈடுபடுகின்றன? அவர்களுக்கு எதிராக அரசு ஏதாவது விசாரணை நடத்தியதா? என்று கேள்வி கேட்டார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த சுகாதாரத்துறை மந்திரி தீபக் சாவந்த், “கடந்த 1½ ஆண்டில் மட்டும் ரத்தம் ஏற்றியதன் மூலம், மாநிலத்தில் 182 பேர் உயிர்க்கொல்லி நோயான எய்ட்ஸ் பாதிப்புக்கு உள்ளானார்கள்” என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். மேலும் சம்பந்தப்பட்ட ரத்த வங்கிகள் குறித்து உறுதியான தகவல் கிடைத்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் பதிலளித்தார்.

Similar News