செய்திகள்

கெஜ்ரிவாலின் முன்னாள் முதன்மைச் செயலளார் ராஜேந்திர குமாருக்கு ஜாமீன்

Published On 2016-07-26 18:42 IST   |   Update On 2016-07-26 18:41:00 IST
ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சரின் முன்னாள் செயலாளர் ராஜேந்திர குமாருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

கடந்த டிசம்பர் மாதம் 15-ம்தேதி டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் அலுவலகத்தில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. 2007 முதல் 2014 ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு ஒப்பந்தஙகள் வழங்கியதில் நடந்த 50 கோடி ரூபாய் ஊழல் தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி, முதன்மை செயலாளர் ராஜேந்திர குமாரை கைது செய்தது. மேலும், துணை செயலாளர் தருண் சர்மா, ராஜேந்திர குமாரின் நெருங்கிய உதவியாளர் அசோக் குமார் மற்றும் தனியார் நிறுவன உரிமையாளர்கள் சந்தீப் குமார் மற்றும் தினேஷ் குப்தா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் டெல்லியில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். சி.பி.ஐ. விசாரணைக்கு பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இன்று சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி அரவிந்த் குமார், ரூ.1 லட்சம் ரொக்க ஜாமீனில் ராஜேந்திர குமாரை விடுவித்து உத்தரவிட்டார். ராஜேந்திர குமார் வழக்கு தொடர்பான சாட்சிகளை சந்திக்கக்கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளையும் கோர்ட் விதித்துள்ளது.

Similar News