செய்திகள்
அமலுக்கு வந்தது 7-வது ஊதியக்குழு பரிந்துரை: மத்திய அரசிதழில் அறிவிக்கை வெளியீடு
மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக மத்திய அரசிதழில் இன்று அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை மாற்றியமைப்பதற்காக அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக்குழு தனது பரிந்துரை அறிக்கையை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மத்திய அரசிடம் தாக்கல் செய்தது.
அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் 14.27 சதவீத உயர்வுடன் மொத்தத்தில் 23.55 சதவீத சம்பள உயர்வு அளிக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. குறைந்தபட்ச சம்பளத்தை ரூ.7 ஆயிரத்தில் இருந்து ரூ.18 ஆயிரமாக உயர்த்தவும், அதிகபட்ச சம்பளத்தை ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தவும் பரிந்துரை செய்திருந்தது.
7–வது ஊதியக்குழுவின் இந்த பரிந்துரைகளை அமல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. மேலும் சம்பள உயர்வை கடந்த ஜனவரி 1–ந்தேதியில் இருந்து கணக்கிட்டு வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டது தொடர்பாக இன்று மத்திய அரசின் அரசிதழில் அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம், ஆகஸ்ட் மாதம் பெறும் சம்பளத்தில் இருந்து உயர்த்தப்பட்ட சம்பள தொகையை மத்திய அரசு ஊழியர்களும் ஓய்வூதியதாரர்களும் பெறுவார்கள்.