செய்திகள்
காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தான் நேரடியாகவே செயல்படுகிறது; இந்திய ராணுவம்
காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டுவதில் பாகிஸ்தான் நேரடியாகவே செயல்படுகிறது என இந்திய ராணுவம் குற்றம்சுமத்தியுள்ளது.
டிராஸ்:
கார்கில் போரில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களுக்கு போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பிறகு வடக்கு பகுதி கமாண்டிங் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் டி.எஸ்.ஹூடா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி பின்வருமாறு:-
காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் தலையிட்டு வருகிறது. காஷ்மீரில் தீவிரவாதத்தை தூண்டி விடுவதில் பாகிஸ்தான் நேரடியாகவே செயல்பட்டு வருகிறது. அதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இதை எல்லைப்பகுதியில் மட்டுமில்லாமல் காஷ்மீர் முழுவதும் பார்க்க முடிகிறது.
இந்தியாவிற்குள் ஊடுருவும் தீவிரவாத குழுக்களுக்கு அங்கு ஆதரவு தரப்பட்டு வருவதை நாங்கள் நேரடியாகவே பார்க்கிறோம். ஒவ்வொரு முறையும் அத்துமீறி தாக்குதலை தொடுத்து அதனை சாதகமாக பயன்படுத்தி தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ பாகிஸ்தான் உதவி செய்து வருகிறது. காஷ்மீரில் அமைதியை குலைத்து அதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் பாகிஸ்தான் நேரடியாக செயல்பட்டு வருகிறது. காஷ்மீரில் உள்ள இளைஞர்களை தீவிரவாதத்திற்கு உட்படுத்தும் வேலைகளை சமூக வலைத்தளங்கள் மூலமாக பாகிஸ்தான் செய்து வருகிறது.
வரும் நாட்களில் காஷ்மீரில் தீவிரவாதிகள் ஊடுருவல்கள் அதிகரிக்கும். சில ஊடுருவல்களை நாங்கள் முறியடித்துள்ளோம். இரண்டு நாட்களுக்கு முன் ஒரு தீவிரவாத குழு ஊடுருவ முயன்றபோது நாங்கள் அதை முறியடித்திருக்கிறோம். இந்த முயற்சியில் இரண்டு வீரர்களை நாம் இழக்க நேரிட்டது. தொடர்ந்து ஊடுருவல்கள் அதிகரித்து வருகின்றன.
காஷ்மீரில் வன்முறையை தூண்டிவிட்டு அந்த நேரத்தில் தீவிரவாதிகளை ஊடுருவச் செய்ய பாகிஸ்தான் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. பாகிஸ்தானின் எந்த சதி வேலையையும் முறியடிக்க இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
இவ்வாறு டி.எஸ். ஹூடா தெரிவித்தார்.