செய்திகள்
காஷ்மீரில் இருந்து திரும்பிய பின் டெல்லியில் மீண்டும் அனைத்துக் கட்சி குழு ஆலோசனை: ராஜ்நாத் சிங் தகவல்
காஷ்மீர் சென்ற அனைத்துக் கட்சி குழு எதிர்கால திட்டம் குறித்து டெல்லியில் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு:
ஜம்மு காஷ்மீரில் நிலவும் வன்முறை போராட்டங்களுக்கு தீர்வு காணும் வகையில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துகட்சி உறுப்பினர்கள் அடங்கிய பிரதிநிதிக்குழு இரண்டு நாள் பயணமாக நேற்று காஷ்மீர் சென்றது. 20
முதல் நாளான நேற்று இந்த குழுவினர் மாநிலம் முழுவதும் இருந்தும் வந்திருந்த 30-க்கும் அதிகமான குழுக்களை சேர்ந்த 200 உறுப்பினர்களை சந்தித்தனர்.
மாநிலத்தில் நிலவும் தற்போதையை சூழல் குறித்து அவர்களின் கருத்துகளையும், தீர்வுக்கான யோசனைகளையும் கேட்டறிந்தனர்.
மேலும், ராஜ்நாத் சிங் தலைமையிலான குழு காஷ்மீர் மாநில ஆளுநர் என்.என்.வோக்ரா, முதல் மந்திரி மெகபூபா முப்தி ஆகியோரையும் சந்தித்ஹ்டு ஆலோசனை நடத்தினர்.
இரண்டாவது நாளாக இன்று ஸ்ரீநகருக்கு ஆனைத்துக் கட்சி குழுவினர் சென்றனர். அங்கு பல்வேறு தரப்பு குழுவினரை சந்தித்தனர். இரண்டு நாள் பயணம் முடிந்து டெல்லி திரும்பு முன்பு ராஜ்நாத் சிங் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது பேசியதாவது:-
காஷ்மீர் சென்ற அனைத்துக் கட்சி குழு எதிர்கால திட்டம் குறித்து டெல்லியில் மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளது.
வருங்காலத்தில் அனைத்துக் கட்சி குழுவானது ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள லடாக் பகுதியையும் பார்வையிடும். அங்குள்ள மக்களின் கருத்துக்களையும் கேட்டறியும்.
குழுக்கள் மற்றும் தனிநபர்கள் உடனான உரையாடல்கள் மிகவும் சிறப்பாக இருந்தது. ஜம்மு-காஷ்மீர் குறித்து பாராளுமன்றத்தில் விவாதம் நடக்கும் பொழுதெல்லாம், அவர்களிடம் இருந்து முழு ஒத்துழைப்பை பெறுவோம் என்று நம்புகிறேன்.
இவ்வாறு தெரிவித்தார்.