செய்திகள்

பருவநிலை மாற்றத்தை குறைப்பதற்கு சாத்தியமான அனைத்தையும் இந்தியா செய்யும்: மோடி கருத்து

Published On 2016-10-03 06:02 IST   |   Update On 2016-10-03 06:02:00 IST
பருவநிலை மாற்றத்தை குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

காந்தியடிகள் பிறந்த தினமான நேற்று பருவநிலை மாறுபாடு தொடர்பான பாரிஸ் ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்தது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கையெழுத்திட்ட ஆவணங்களை
 ஐ.நா.விற்கான இந்தியாவின் நிரந்தர தூதர் சையது அக்பருதீன் ஐக்கிய நாடுகள் சபையிடம் வழங்கினார்.

இந்நிலையில், பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்ததற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் பாராட்டு தெரிவித்து இருந்தார்.

காந்தி ஜெயந்தி நாளில் இந்த ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் அளித்ததற்கு பிரான்ஸ் நாடுகள் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தது.

இந்நிலையில் இது குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பருவநிலை மாற்றத்தை குறைக்க சாத்தியமான அனைத்தையும் செய்ய இந்தியா உறுதிபூண்டுள்ளதாக கூறினார்.

இயற்கை குறித்த பொறுப்புணர்வும், கவலையும் இந்திய பண்பாட்டில் ஒருங்கிணைந்து உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Similar News