செய்திகள்

காஷ்மீரில் பயங்கர தீவிபத்து: பல வீடுகள் நாசம்

Published On 2016-11-21 13:38 IST   |   Update On 2016-11-21 13:38:00 IST
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் இன்று ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கிய பல வீடுகள் நாசமடைந்தன.
ஸ்ரீநகர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஸ்ரீநகரில் புச்வாரா பகுதியையொட்டியுள்ள டால்கேட் பகுதியில் நடுத்தர மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் இன்று திடீரென்று தீவிபத்து ஏற்பட்டது.

ஒருவீட்டில் பிடித்த தீ, மளமளவென்று அருகாமையில் இருக்கும் வீடுகளுக்கும் பரவியதால் அவற்றில் வசித்துவந்த மக்கள் பீதியடைந்தனர். கையில் கிடைத்த உடைமைகளை சுருட்டிக்கொண்டும், கைக்குழந்தைகளை தூக்கிக்கொண்டும் அவர்கள் உயிர்பயத்தில் வெளியே ஓடினர்.

தகவலறிந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்துவந்த வீரர்கள் வெகுநேரம் போராடி, தீயை அணைத்து கட்டுப்படுத்தினர். இந்த தீவிபத்தில் பத்துக்கும் அதிகமான வீடுகள் முழுமையாக நாசமடைந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Similar News