செய்திகள்

ஒரிசா மாநிலத்தில் 9 வகுப்பு மாணவி உடன் படிக்கும் மாணவனால் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூரம்

Published On 2017-04-04 00:27 IST   |   Update On 2017-04-04 00:27:00 IST
ஒரிசா மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி உடன் படிக்கும் மாணவனால் கற்பழிக்கப்பட்டு, அந்த சம்பவம் சக மாணவர்கள் 3 பேரால் வீடியோ எடுக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.
புவனேஷ்வர்:

ஒரிசா மாநிலத்தில் 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி உடன் படிக்கும் மாணவனால் கற்பழிக்கப்பட்டு, அந்த சம்பவம் சக மாணவர்கள் 3 பேரால் வீடியோ எடுக்கப்பட்ட கொடூரம் நிகழ்ந்துள்ளது.

ஒரிசா மாநிலம் நயகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பகுதியில் கடந்த மாதம் 9 வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் உடன் படிக்கும் மாணவனால் டியூசனில் வைத்து கற்பழிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தை அந்த மாணவனின் நண்பர்கள் 3 பேர் வீடியோ எடுத்துள்ளனர். இதையடுத்து மாணவியின் பெற்றோர் அந்த கிராமத்தில் உள்ள பஞ்சாயத்தில் முறையிட்டுள்ளனர்.

கற்பழிப்பில் ஈடுபட்ட அந்த மாணவனே பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்ய வேண்டும் என பஞ்சாயத்தில் தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதில் உடன்பாடு இல்லாததால் அந்த மாணவின் குடும்பத்தினர் போலீசில் புகாரளித்துள்ளனர். புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவியை மருத்துவப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவனை கைது செய்துள்ளதாகவும், வீடியோ எடுத்த மூன்று பேர் தலைமறைவாகி விட்டதால் அவர்களை தீவிரமாக தேடி வருவதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News