செய்திகள்
போலி ஆவணம் கொடுத்து வங்கியில் கடன் வாங்கியவருக்கு 30 ஆண்டு ஜெயில்: சி.பி.ஐ. கோர்ட் தீர்ப்பு
பீகார் மாநிலத்தில் போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் கடன் வாங்கி மோசடி செய்தவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பாட்னா:
பீகார் மாநிலம் அர்வால் மாவட்டம் சுதிர் குமார் என்பவர் கடந்த 2015-ம் ஆண்டு மத்திய பிகார் கிராமீன் வங்கியில் பவர் டில்லர் வாங்குவதற்காக கடன் வாங்கியுள்ளார். இதற்காக, அவர் வங்கியில் கொடுத்த ஆவணங்கள் போலியானவை எனத் தெரியவந்ததையடுத்து அவர் மீது வங்கி சார்பில், சி.பி.ஐ. கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கின் வாதப் பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், சிறப்பு நீதிபதி மனோஜ் குமார் சிங் இன்று தீர்ப்பளித்தார். அவர் தனது தீர்ப்பில், சுதிர் குமார் குற்றம் செய்தது நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 30 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து உத்தரவிட்டார். மேலும், 54.72 லட்சம் அபராதம் விதிப்பதாகவும் அறிவித்த நீதிபதி, அபராதத்தை செலுத்தத் தவறினால், சுதிர்குமாரின் சொத்துக்களை அதிகாரிகள் விற்று அபராதத்தை வசூலித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டார்.
இதையடுத்து, தண்டனையைக் குறைக்கும்படி சுதிரின் வழக்கறிஞர் கேட்டுக்கொண்டார். ஆனால், குற்றவாளி சுதிர் ஏற்கனவே 2 வழக்குகளில் தண்டனை பெற்றுள்ளதால் அவருக்கு இது பழக்கமாகிவிட்டது என்று கண்டித்த நீதிபதி, தண்டனையை குறைக்க மறுத்து விட்டார்.