செய்திகள்
டெல்லி ஐ.ஐ.டி. பல்கலைக்கழக மாணவி தூக்குபோட்டு தற்கொலை
டெல்லி ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்து வரும் மஞ்சுலா தேவக் என்ற மாணவி தனது அறையில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுடெல்லி:
டெல்லி ஐ.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி படித்து வரும் 27 வயது மாணவி நேற்று இரவு நாலந்தா அடுக்குமாடிக் குடியிறுப்பில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மஞ்சுலா தேவக் என்ற இளம்பெண் நேற்று இரவு 7.38 மணியளவில் அவரது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கடந்த 2013-ஆம் ஆண்டில் திருமணமான மஞ்சுலாவின் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் போபாலில் தங்கியிருக்கின்றனர். மஞ்சுலா டெல்லியில் வீடு எடுத்து படித்து வந்திருக்கிறார்.
மஞ்சுலாவின் தற்கொலை குறித்து வழக்கு பதிந்துள்ள போலீசார், இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது தோழிகள் சிலரிடமும் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். எனினும் தற்போது வரை மஞ்சுலாவின் தற்கொலை குறித்த காரணங்கள் ஏதும் தெரியவில்லை. மேலும் அவரது அறையில் தற்கொலை குறிப்பு எதுவும் கிடைக்கவில்லை என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.