செய்திகள்
மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: லல்லு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் லல்லு பிரசாத் யாதவ் 9-ந்தேதி கோர்ட்டில் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது.
பாட்னா:
ஒருங்கிணைந்த பீகார் மாநிலத்தில் கடந்த 1991- 93-ம் ஆண்டு கால கட்டத்தில் லல்லுபிரசாத் யாதவ் முதல்-மந்திரியாக இருந்த போது மாட்டுத் தீவனம் வாங்கியதில் ஊழல் நடந்தது.
இந்த வழக்கில் லல்லு பிரசாத் யாதவுக்கு ராஞ்சி சி.பி.ஐ. கோர்ட்டு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு தீர்ப்பு கூறியது. இதைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட லல்லுபிரசாத் பின்னர் ஜாமீனில் விடுதலையானார்.
இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு லல்லு பிரசாத்துக்கு எதிரான குற்றவியல் சதிக்குற்றச்சாட்டுகள் செல்லும் என்று கடந்த 8-ந்தேதி தீர்ப்பு அளித்தது.
இதையடுத்து வழக்கு விசாரணை வருகிற 9-ந் தேதி ராஞ்சி கோர்ட்டில் தொடங்குகிறது.
எனவே அன்றைய தினம் லல்லு பிரசாத் யாதவ் கோர்ட்டில் ஆஜராக வேண்டும் என்று ராஞ்சி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதே போல் இந்த ஊழலில் தொடர்புடைய பீகார் முன்னாள் முதல்-மந்திரி ஜெகநாத் மிஸ்ரா, ஜார்க்கண்ட் முன்னாள் தலைமை செயலாளர் சகல் சக்ரவர்த்தி ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி எஸ்.எஸ்.பிரசாத் உத்தரவிட்டுள்ளார்.