செய்திகள்

மூன்று நாள் பதற்றத்திற்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பும் காஷ்மீர்

Published On 2017-05-31 14:10 IST   |   Update On 2017-05-31 14:10:00 IST
ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சப்ஸார் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதற்ற நிலைக்கு சென்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு மூன்று நாட்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.
ஸ்ரீநகர்:

ஹிஸ்புல் முஜாகிதீன் தளபதி சப்ஸார் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் பதற்ற நிலைக்கு சென்ற காஷ்மீர் பள்ளத்தாக்கு மூன்று நாட்களுக்கு பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சனிக்கிழமை ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் தளபதி சப்ஸார் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டர். இதையடுத்து, அங்கு பதற்றமான சூழ்நிலை உருவானது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. கடைகள், வணிக வளாகங்கள் அடைக்கப்பட்டன. பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க அனந்தநாக், ஷோபியன், புல்வாமா, புத்கம் ஆகிய மாவட்டங்களில் ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பாதுகாப்பு படையினரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் மேற்கண்ட பகுதிகள் கொண்டுவரப்பட்டது. இதனால், அசம்பாவித சம்பவங்கள் தவிர்க்கப்பட்டன. இந்நிலையில், மூன்று நாட்களுக்கு பின்னர் அப்பகுதியில் அமைதி திரும்பியுள்ளது. கடைகள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டுள்ளன. பொதுமக்களும் வீடுகளை விட்டு வெளிவர தொடங்கியுள்ளனர். இருப்பினும், பள்ளி, கல்லூரிகள் இயங்கவில்லை.

இயல்புநிலை திரும்பினாலும் பாதுகாப்பு படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். எல்லைப்பகுதியில் ஊடுருவல் ஏதும் நடைபெறுகிறதா? என்றும் கண்கானித்து வருகின்றனர்.

Similar News