செய்திகள்

பெட்ரோல் பங்க் லைசென்ஸ் பெற்றதில் முறைகேடு: லாலு பிரசாத் மகனுக்கு நோட்டீஸ்

Published On 2017-05-31 19:21 IST   |   Update On 2017-05-31 19:21:00 IST
முறைகேடாக பெட்ரோல் பங்கிற்கு லைசென்ஸ் பெற்ற குற்றச்சாட்டில், பீகார் சுகாதாரத் துறை மந்திரியும், லாலு பிரசாத் மகனுமான தேஜ் பிரதாப்க்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாட்னா:

பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. லாலுவின் இரண்டு மகன்கள் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.

தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக இருக்கிறார். 28 வயதான மற்றொரு மகன் தேஜ் பிரதாப், கேபினட் அமைச்சர் என்ற சுகாதாரத் துறை அமைச்சராக உள்ளார்.

இந்நிலையில், முறைகேடாக பெட்ரோல் பங்கிற்கு லைசென்ஸ் பெற்ற குற்றச்சாட்டில், பீகார் சுகாதார துறை மந்திரியும் லாலு பிரசாத் மகனுமான தேஜ் பிரதாப்க்கு பாரத் பெட்ரோலியம் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 

பாட்னா நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள அனிசபாத் பைபாஸ் சாலையில் தவறான தகவல் அளித்து பெட்ரோல் பங்க் உரிமத்தை தேஜ் பிரதாப் பெற்றார் என்று புகாரின் அடிப்படையில் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முன்னதாக காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் இரண்டாது ஆட்சி காலத்தில் 2011-ம் ஆண்டு தேஜ் பிரதாப்புக்கு முறைகேடாக அனுமதி வழங்கப்பட்டதாக பா.ஜ.க. மூத்த தலைவர் சுஷில் குமார் மோடி ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Similar News