செய்திகள்

யு.பி.எஸ்.சி. தேர்வு முடிவுகள் வெளியீடு - தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம்

Published On 2017-05-31 21:11 IST   |   Update On 2017-05-31 21:11:00 IST
யு.பி.எஸ்.சி. நடத்திய 2016 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது. தமிழக அள்வில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார்.
புதுடெல்லி:

ஐஏஎஸ், ஐபிஎஸ் போன்ற குடிமைப் பணிகளுக்கான தேர்வை ஒவ்வொரு ஆண்டும் மத்தியப் பணியாளர் தேர்வு ஆணையம்(யு.பி.எஸ்.சி.) நடத்தி வருகிறது. இது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு என மூன்று கட்டங்களாக நடத்தப்படும்.

இந்நிலையில், யு.பி.எஸ்.சி. நடத்திய 2016 ஆம் ஆண்டிற்கான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியீடப்பட்டுள்ளது.  www.upsc.gov.in என்ற இணைய தளத்தில் தேர்வு முடிவுகளை பார்க்கலாம். 

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் முதன்மை தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டு மார்ச் மாதம் நேர்முகத் தேர்வுகள் நடைபெற்றது. தற்போது அனைத்தும் முடிந்து தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது.

யுபிஎஸ்சி தேர்வில் தேசிய அளவில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஆர்.கே.நந்தினி முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். 2-ம் இடத்தை  அன்மோல் ஷேர்சிங் பேடியும், 3-ம் இடத்தை ரோனன்கியும் பிடித்துள்ளனர்.

தமிழக அளவில் பிரதாப் முருகன் முதலிடம் பிடித்துள்ளார். தேசிய அளவில் அவர் 21-வது இடத்தை பிடித்தார்.

மொத்தம் 1099 பேர் மத்திய அரசின் பல்வேறு பணிகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். மேலும் 220 பேர் காத்திருப்பு பட்டியலில் உள்ளனர்.

Similar News