செய்திகள்

கேரளாவில் 2 ‘திராவிட மரபணு’ மண்புழு இனங்கள் கண்டுபிடிப்பு

Published On 2017-08-19 15:22 IST   |   Update On 2017-08-19 15:22:00 IST
கேரளாவின் மேற்குதொடர்ச்சி மலைப் பகுதியில் திராவிட மரபணுவைச் சேர்ந்த இரண்டு புதிய மண்புழு இனங்களை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவின் மேற்கு தொடர்ச்சி மலைத் தொடர் பகுதிகளில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த மகாத்மா காந்தி பல்கலைக் கழகம் மற்றும் இமாச்சல பிரதேசத்தின் ஷூலினி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

இரண்டு பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட பணியில் இரண்டு புதிய மண்புழு வகைகளை கண்டுபிடித்துள்ளனர்.

அந்த மண்புழுக்களுக்கு திராவிட பாலிடைவெர்டிகுலடா மற்றும் திராவிட தோமசி என்று ஆய்வாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

மூணார் பகுதியில் எர்விகுலம் தேசிய பூங்கா, பாம்படன் சோலா தேசிய பூங்கா மற்றும் சின்னார் வனவிலங்கு சரணாலயம் ஆகிய பாதுகாக்கப்பட்ட சோலா புல்வெளி நிலங்களில் இருந்து திராவிட பாலிடைவெர்டிகுலடா மண்புழுகண்டெடுக்கப்பட்டது.

திராவிட தோமசி மண்புழு மலப்புரம் மற்றும் கோழிக்கோட்டிற்கு இடையில் உள்ள எல்லைப் பகுதியான காக்கடாம்போயில் அருகில் கோழிப்பரா பகுதியில் கண்டெடுக்கப்பட்டது.

இந்திய துணைக் கண்டத்தில் திராவிட மரமணுவைச் சேர்ந்த 73 வகையான மண்புழுக்கள் இருப்பது இதுவரை உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.


Similar News