செய்திகள்
மகளை கொன்ற தாய்-தந்தைக்கு ஆயுள் தண்டனை
உத்தரப்பிரதேசம் மாநிலம் பாந்தா மாவட்டத்தில் சொந்த மகளை கொன்ற தந்தை மற்றும் தாய்க்கு ஆயுள் தண்டனை அளித்து மாவட்ட நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
லக்னோ:
உத்தரப்பிரேதசம் மாநிலம் பாந்தா மாவட்டத்தில் உள்ள காஜ்புர்வா பகுதியைச் சேர்ந்த ராம் ஆத்தர் மற்றும் அவரது இரண்டாவது மனைவி சுதா கடந்த 2013 ம் ஆண்டு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். இருவரும் தங்கள் சொந்த மகள் சங்கீதாவை அடித்து கொன்றதாக வழக்கு நடைபெற்று வந்தது.
இந்நிலையில், வழக்கை விசாரித்த மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி புபேந்திர சாகே, இருவருக்கும் ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். மேலும், இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கணவன், மனைவி இருவரும் மகளுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அவரை உருட்டுக்கட்டைகளால் அடித்து கொலை செய்ததாக கூறப்பட்டுள்ளது.