செய்திகள்

கர்நாடகாவின் முதல் பெண் டி.ஜி.-ஐ.ஜி.யாக நீலாமணி ராஜூ நியமனம் - கிரண் பேடி வாழ்த்து

Published On 2017-11-01 16:14 IST   |   Update On 2017-11-01 16:14:00 IST
கர்நாடகாவின் முதல் பெண் டி.ஜி. மற்றும் ஐ.ஜியாக நியமிக்கப்பட்டுள்ள ஐ.பி.எஸ். அதிகாரி நீலாமணி என்.ராஜூவுக்கு புதுச்சேரி கவர்னர் கிரண் பேடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஐதராபாத்:

கர்நாடகாவின்  டி.ஜி. மற்றும் ஐ.ஜி.யாக ஐ.பி.எஸ். அதிகாரி நீலாமணி என்.ராஜூ நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவின் முதல் பெண் ஜ.ஜி. ஆவார்.



1983-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற நீலாமணி 23 ஆண்டுகளாக மத்திய அரசு சார்பாக பணியாற்றினார். கடந்த 2016-ம் ஆண்டு கர்நாடக மாநிலப் பணிக்கு திரும்பினார். நீலாமணியின் கணவர் முதல்வர் சித்தராமையாவிடம் செயலாளராக பணியாற்றினார். இவர் கடுமையான போட்டியின் நடுவே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நீலாமணி உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவர்.



இந்நிலையில், புதுச்சேரி கவர்னரும் மற்றும் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியுமான கிரண் பேடி நீலாமணிக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.

கர்நாடக உதய தினமான இன்று, பெண் அதிகாரி ஒருவர் மாநில போலீஸ் துறைக்கு மூத்த அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளது அனைவரிடமும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Similar News