செய்திகள்

வாய்தகராறில் டி.வி. நிருபரை சுட்டுக்கொன்ற போலீஸ்: திரிபுராவில் கொடூரம்

Published On 2017-11-21 17:17 IST   |   Update On 2017-11-21 17:17:00 IST
திரிபுரா மாநிலத்தில் வாய் தகராறில் ஆத்திரமடைந்த போலீஸ்காரார் தொலைக்காட்சி நிருபரை இன்று சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அகர்தலா:

திரிபுரா மாநிலத்தின் தலைநகரான அகர்தலாவில் இருந்து சுமார் 8 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள போத்ஜங் நகர எல்லைக்குட்பட்ட ஆர்.கே. நகர் பகுதியில் உள்ளூர் தொலைக்காட்சி சேனலான ‘வேன்கார்ட்’ மற்றும் ‘சியான்டன் பத்ரிகா’ பத்திரிகையின் நிருபரான சுதிப் டத்தா பவுமிக் என்பவருக்கும் திரிபுரா ரைபிள்ஸ் போலீஸ் படையை சேர்ந்த ஒருவருக்கும் இன்று வாய் தகராறு ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர் திடீரென தனது துப்பாக்கியால் சுதிப் டத்தா பவுமிக்-ஐ நோக்கி சரமாரியாக சுட்டார். இதில் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்த பத்திரிகை நிருபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

அவரது உடலை கைப்பற்றி அகர்தாலாவில் உள்ள கோபிந்த பல்லவ் பாந்த் மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பிவைத்த போலீசார், இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Similar News