செய்திகள்

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியின் பதவிக்காலம் நீட்டிப்பு

Published On 2018-02-06 00:42 IST   |   Update On 2018-02-06 00:42:00 IST
நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் கந்த்-தின் பதவிக்காலத்தை 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. #AmitabhKant #NITIAayogCEO
புதுடெல்லி:

நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியான அமிதாப் கந்த்-தின் பதவிக்காலத்தை 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தியாவில் திட்டக் குழுவுக்கு மாற்றாக 2015-ம் ஆண்டு நிதி ஆயோக் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அதன் தலைவராக பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பேற்றார். அந்த அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமிதாப் கந்த் (59) கடந்த 2015-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பின்னர் 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி அவரது பதவிக்காலம் மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அவரது நீட்டிக்கப்பட்ட பதவிக்காலம் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், அவரது பதவிக்காலத்தை மீண்டும் நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி அமிதாப் கந்த் நிதி ஆயோக் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரியாக 2019-ம் அண்டு ஜூன் 30-ம் தேதி வரை நீடிப்பார் என மத்திய பணியாளர் மற்றும் பயிற்சி ஆணையம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது. #AmitabhKant #NITIAayogCEO #tamilnews

Similar News