செய்திகள்
ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் வழக்கு: இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் அப்பீல் செய்த வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது. #Sreesanth #BCCI
புதுடெல்லி:
ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் அப்பீல் செய்த வழக்கில் 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப சுப்ரீம் கோர்ட்டு நேற்று உத்தரவிட்டது.
2013-ம் ஆண்டுக்கான ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இடம் பிடித்து ஆடிய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜித் சண்டிலா ஆகியோர் உள்பட 36 பேர் மீது ‘ஸ்பாட்-பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த பாட்டியாலா கோர்ட்டு குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி ஸ்ரீசாந்த் உள்பட அனைவரையும் விடுதலை செய்து கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது. இதற்கிடையில் இந்திய கிரிக்கெட் வாரிய ஒழுங்கு நடவடிக்கை குழு ஸ்ரீசாந்த் மீதான புகார் குறித்து விசாரணை நடத்தி அவர் கிரிக்கெட் விளையாட ஆயுட்கால தடையை விதித்தது.
தனக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை எதிர்த்து ஸ்ரீசாந்த் கேரள கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். விசாரணை நீதிமன்றத்தால் தான் நிரபராதி என்று அறிவித்த பிறகும் தனக்கு ஆயுட்கால தடை விதித்து இருப்பது நியாயமற்றது என்று அந்த மனுவில் குறிப்பிட்டு இருந்தார். இதனை விசாரித்த தனி நீதிபதி ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கி தீர்ப்பளித்தார். இந்த உத்தரவு கடந்த ஆண்டு ஆகஸ்டு 7-ந் தேதி பிறப்பிக்கப்பட்டது.
ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடையை நீக்கியதை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் கேரள ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச்சில் அப்பீல் செய்யப்பட்டது. ஸ்ரீசாந்த் மீதான குற்றச்சாட்டில் போதிய ஆதாரம் இருந்ததால் தான் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் வாதிடப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ஸ்ரீசாந்த் மீதான தடையை நீக்கிய தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதித்ததுடன், ஸ்ரீசாந்த் மீதான ஆயுட்கால தடை தொடரும் என்று உத்தரவிட்டனர்.
இதனை அடுத்து ஸ்ரீசாந்த் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கார், சந்திரசூட் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஸ்ரீசாந்தின் மனுவுக்கு 4 வாரத்திற்குள் பதில் அளிக்கும்படி இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் அதன் வக்கீல் பராக் திரிபாதி நோட்டீசை பெற்றுக்கொண்டார். ஸ்ரீசாந்த் சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சல்மான் குர்ஷித் வாதிடுகையில், ‘சூதாட்ட வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஸ்ரீசாந்தை விடுவித்த நிலையிலும் அவருக்கு ஆயுட்கால தடை விதித்தது மோசமான நடவடிக்கை ஆகும்’ என்று தெரிவித்தார். #Sreesanth #BCCI