செய்திகள்

ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு நடனமாடிய பெண் - வைரலாகும் வீடியோ

Published On 2018-02-06 12:19 IST   |   Update On 2018-02-06 12:19:00 IST
அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தில் தன்னை ஏமாற்றிய காதலன் வீட்டு முன்பு இளம்பெண் நடனமாடிய வீடியோ இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சண்டிகர்:

அரியானா மாநிலம் குருகிராம் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் தன்னை ஏமாற்றிய காதலனை பழிவாங்க நினைத்து வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டார். தனது காதலன் வீட்டு முன்பு சத்தமாக பாட்டு போட்டு நடனமாட தொடங்கினார். அவர் குடித்து விட்டு நடனமாடியதாக கூறப்படுகிறது.

இதனை அங்கு சுற்றியிருந்தவர்கள் வேடிக்கை பார்த்ததுடன் வீடியோவும் எடுத்தனர். வீடியோ தற்சமயம் சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஏமாற்றிய காதலனை பழிவாங்க வீட்டு முன்பு பாட்டு போட்டு இளம்பெண் நடனமாடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News