செய்திகள்
சவுதி அரேபியாவில் வெளிநாட்டினர் பணியாற்ற தடை: 30 லட்சம் பணியாளர்கள் பாதிக்கும் அபாயம்
சவுதி அரேபியாவில் 12 பிரிவுகளில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்ததடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டில் பணிபுரியும் 30 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள்.
புதுடெல்லி:
சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை குறைந்ததை தொடர்ந்து சவுதி அரேபியாவில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. அதை சீரமைக்கபட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
பொருளாதார சரிவு காரணமாக அங்கு வேலை வாய்ப்பு குறைந்து விட்டது. இதனால் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் பலர் வேலை இன்றி தவிக்கின்றனர். அதை குறைக்கவும் சவுதி அரேபிய மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கவும் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி சவுதி அரேபியாவில் 12 பிரிவுகளில் வெளிநாட்டினரை பணியில் அமர்த்ததடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான உத்தரவை அந்நாட்டின் தொழிலாளர்துறை மந்திரி அலி பின் நசீர் அல்-ஹாபிஸ் பிறபித்துள்ளார்.
அதன்படி கார் மற்றும் மோட்டார் பைக் ஷோரூம்கள், ரெடிமேடு துணிக்கடைகள், வீடு மற்றும் அலுவலக பர்னீச்சர் கடைகள், வீட்டு உபயோகம் மற்றும் சமையலறை சாதனங்கள் விற்பனையகங்களில் வருகிற செப்டம்பர் 11-ந்தேதி முதல் கம்பெனிகள் வெளிநாட்டினரை பணியமர்த்த கூடாது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையகம், கடிகாரங்கள் மற்றும் கடிகாரங்கள் கடை, கண்கண்ணாடி விற்பனை செய்யும் கடைகளில் வருகிற நவம்பர் 9-ந்தேதி முதல் வெளிநாட்டினரை பணியில் அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ உபகரணங்கள் சப்ளை செய்யும் கடைகள், கட்டுமான பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள், ஆட்டோ உதிரிப்பாகங்கள் கடைகள், தரைவிரிப்புகள் விற்பனையகம் மற்றும் இனிப்பு கடைகளில் வருகிற 2019-ம் ஆண்டு ஜனவரி 7-ந்தேதி முதல் வெளிநாட்டை சேர்ந்தவர்களை நிறுவனங்கள் பணியில் அமர்த்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் 12 கோடி வெளிநாட்டினர் பணிபுரிகின்றனர். அவர் சவுதி அரேபியரால் ஒதுக்கப்பட்ட அபாயகரமான, மிக குறைந்த சம்பளம் வழங்கும் வேலைகளை செய்கின்றனர்.
தற்போது சவுதி அரேபியா கொண்டுவந்துள்ள இந்த புதிய சட்டத்தால் சவுதி அரேபியாவில் பணிபுரியும் 30 லட்சம் இந்தியர்கள் பாதிக்கப்படுவார்கள். #tamilnews