செய்திகள்

உத்தரபிரதேசத்தில் சுகாதார பானமாக பசு மாட்டு சிறுநீர்: பா.ஜனதா அரசு திட்டம்

Published On 2018-02-06 14:46 IST   |   Update On 2018-02-06 14:46:00 IST
உத்தரபிரதேசத்தில் பசு மாட்டு சிறுநீரை சுகாதார பானமாக மேம்படுத்த பா.ஜனதா அரசு முடிவு செய்து உள்ளது.
பரேலி:

நமது நாட்டில் ஆதிகாலத்தில் இருந்தே மாட்டு சிறுநீர் மருந்தாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சில வகை ஆயுர்வேத மருந்துகளை நாட்டு வைத்தியர்கள் மாட்டு சிறுநீர் மூலம் தயாரித்து வருகிறார்கள்.

இதே போல வீட்டு தரையை சுத்தப்படுத்துவதற்கு மாட்டு சிறுநீரால் தயாரிக்கப்பட்ட திரவத்தை பயன்படுத்துகின்றனர்.

இதற்கிடையே பா.ஜனதா ஆட்சி நடக்கும் உத்தர ரதேச மாநிலத்தில் மாட்டு சிறுநீரில் இருந்து 8 வகையான ஆயுர்வேத மருந்து களை தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் உத்தரபிரதேசத்தில் பசு மாட்டு சிறுநீரை சுகாதார பானமாக மேம்படுத்த பா.ஜனதா அரசு முடிவு செய்து உள்ளது.



உத்தரபிரதேசத்தில் ஆயுர்வேத பார்மசி இரண்டு இடத்தில் உள்ளது. அதில் பில்பட் என்ற இடத்தில் உள்ள ஆயுர்வேத பார்மசி தான் பசு மாட்டு சிறுநீரை சுகாதார பானமாக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாட்டில்களில் இதை அடைத்து விற்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுகுறித்து அரசு ஆயுர்வேத கல்லூரி மற்றும் மருத்துவமனை சூப்பிரண்டும், முதல்வருமான டாக்டர் பிரகாஷ் சந்திரா சக்சேனா கூறியதாவது:-

பசு மாட்டு சிறுநீரை சுகாதார பானமாக மேம்படுத்தும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 10 முதல் 20 மில்லி மீட்டர் வரை பசுமாட்டு சிறுநீரை குடித்தால் பல விதமான நோய்களை தடுக்கலாம். இதற்காக பாட்டில்களில் அடைத்து விற்பனை செய்யும் பணி நடைபெறுகிறது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

இந்த பார்மசி தான் உத்தரபிரதேசத்தில் 16 மாவட்டங்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை சப்ளை செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

Similar News