செய்திகள்

அசாமில் 12 வீடுகளில் தீவிபத்து - உடல் கருகி 3 சிறுமிகள் பலி

Published On 2018-02-06 21:56 IST   |   Update On 2018-02-06 21:56:00 IST
அசாம் மாநிலத்தில் இன்று 12 வீடுகளில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று சிறுமிகள் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 சிறுவர்கள் மோசமான நிலையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
கவுகாத்தி:

அசாம் மாநிலம் கவுகாத்தியில் பஷிஷ்தா நகரில் உள்ள படார்குச்சி பகுதியில் வீடுகள் உள்ளன. இன்று காலை ஒரு வீட்டில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து அருகில் இருந்த 11 வீடுகளிலும் பரவி எரிய தொடங்கியது. இந்த தகவலறித்த வந்த தீயணைப்பு வீரர்கள் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கோர விபத்தில் 3 சிறுமிகள் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தன. மேலும் காயம் அடைந்த இரண்டு சிறுவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் மற்றும் சேதமதிப்புகள் இன்னும் வெளியாகவில்லை.

இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடத்தப்படும் என்று உள்ளூர் போலீசார் தெரிவித்துள்ளனர்.

Similar News