செய்திகள்
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படை நடத்திய என்கவுண்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலை
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பந்திப்போரா மாவட்டத்தில் ஹாஜின் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அப்போது, ஷகுர்தின் கிராமத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சுட தொடங்கினர். இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் ஒரு தீவிரவாதி சுட்டு கொல்லப்பட்டான். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது என பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #tamilnews