செய்திகள்

பெங்களூரு நகரில் கால் டாக்சி சேவையில் ஈடுபட கர்நாடக அரசு முடிவு

Published On 2018-07-08 09:33 IST   |   Update On 2018-07-08 09:33:00 IST
பெங்களூரில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கால் டாக்சி சேவையில் ஈடுபட அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
பெங்களூரு:

கர்நாடகா போக்குவரத்து துறை மந்திரி தம்மண்ணா நிருபர்களிடம் கூறியதாவது:-

பெங்களூருவில் இயங்கும் வாடகை கார் நிறுவனங்கள் உரிய விதிமுறைகளை பின்பற்றுவதில்லை. இரவு நேரங்களில் பயணிக்கும் பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்படுவது தொடர்கிறது. ஆங்காங்கே வழிப்பறி சம்பவங்களும் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கால் டாக்சி சேவையில் ஈடுபட அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. இதனை அரசே நடத்தும் போது மக்களுக்கு நிறைய நன்மைகள் கிடைக்க வாய்ப்புள்ளது.

இதன் மூலம் கன்னட மக்களுக்கு வேலைவாய்ப்பும், அரசுக்கு வருவாயும் கிடைக்கும். தனியார் நிறுவனங்கள் அளிக்கும் விளக்கத்தை பொறுத்து அரசு இந்த விவகாரத்தில் முடிவு எடுக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News