செய்திகள்
நிதிஷ் ரானேவிடம் விசாரணை நடத்தும் போலீசார்

மும்பையில் அரசு அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்எல்ஏ கைது

Published On 2019-07-04 22:16 IST   |   Update On 2019-07-04 22:16:00 IST
மகாராஷ்டிரா மாநிலத்தில் சாலையை ஆய்வு செய்ய சென்ற அரசு அதிகாரி மீது சகதியை ஊற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானேவை போலீசார் கைது செய்தனர்.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கன்காவ்லில் பகுதியில் உள்ள பாலம் அருகே மும்பை-கோவா சாலையில் உள்ள பள்ளங்களை ஆய்வு செய்வதற்காக நெடுஞ்சாலைத் துறையின் இன்ஜினியர் பிரகாஷ் சேதேகா சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே தனது ஆதரவாளர்களுடன் அவரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

திடீரென அவர்கள் அங்கே ஏற்கனவே பக்கெட்களில் வைக்கப்பட்டிருந்த சகதி நீரை எடுத்து வந்து அரசு அதிகாரி மீது ஊற்றினர். அவரை பாலத்தில் கட்டிவைக்கவும் முயற்சி செய்தனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது.

காங்கிரஸ் எம்.எல்.ஏ. நிதிஷ் ரானே மகாராஷ்டிராவின் முன்னாள் முதல் மந்திரி நாராயண் ரானேவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநில போலீசார், நிதிஷ் ரானே மற்றும் அவரது ஆதரவாளர்கள் 40க்கும் அதிகமானோர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், எம்.எல்.ஏ நிதிஷ் ரானேவை கைது செய்த போலீசார், நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துகின்றனர். 

Similar News