செய்திகள்
பிரதமர் மோடி

47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி சந்திப்பு

Published On 2019-07-18 02:57 IST   |   Update On 2019-07-18 02:57:00 IST
47 முதல் 56 வயது வரையிலான பா.ஜனதா எம்.பி.க்களை மோடி சந்தித்து பாராளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினார்.
புதுடெல்லி:

பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜனதா எம்.பி.க்களை 7 பிரிவுகளாக பிரித்து சந்தித்து வருகிறார். இதன் மூலம் மக்களவை மற்றும் மாநிலங்களவையை சேர்ந்த உறுப்பினர்கள் பிரதமரை சந்திக்கும் வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த வரிசையில் ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் இளம் வயது எம்.பி.க்கள், மந்திரிகள் ஆகியோரை பிரதமர் ஏற்கனவே சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து 47 முதல் 56 வயது வரையிலான எம்.பி.க்களை நேற்று காலையில் மோடி சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாராளுமன்ற விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து எம்.பி.க்களுக்கு பல்வேறு அறிவுரைகளை பிரதமர் வழங்கினார்.

எம்.பி.க்களின் அறிமுக கூட்டமாகவும் நடத்தப்படும் இந்த சந்திப்புகளுக்கு உள்துறை மந்திரியும், பா.ஜனதா தலைவருமான அமித்ஷா, கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர்.

பா.ஜனதா எம்.பி.க்களுடனான பிரதமரின் 7-வது சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் 56 வயதுக்கு மேற்பட்ட எம்.பி.க்களை மோடி சந்திக்கிறார். 

Similar News