செய்திகள்
சுவிட்சர்லாந்துக்கான இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமனம்
சுவிட்சர்லாந்து நாட்டுக்கான அடுத்த இந்திய தூதராக மோனிகா கபில் மோஹ்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
புதுடெல்லி:
ஸ்வீடன் மற்றும் லத்வியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராக பணியாற்றி வருபவர் மோனிகா கபில் மோஹ்தா. இந்திய வெளியுறவுப் பணியில் 1985ல் இணைந்த மோனிகா, இதற்கு முன் கடந்த 2011ம் ஆண்டு ஜூலை முதல் ஜனவரி 2015ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் போலந்து மற்றும் லிதுவேனியா ஆகிய நாடுகளுக்கான இந்திய தூதராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
இதேபோன்று பிரான்ஸ், நேபாளம் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களில் பணியாற்றியுள்ள மோனிகா, பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் அமைந்துள்ள யுனெஸ்கோ அமைப்புக்கான இந்தியாவின் நிரந்தர குழுவிலும் பணிபுரிந்த அனுபவம் வாய்ந்தவர்.
இந்நிலையில், மத்திய வெளிவிவகார அமைச்சகத்தின் செயலாளர் அந்தஸ்தில் உள்ள மோனிகாவை, சுவிட்சர்லாந்து நாட்டுக்கான அடுத்த இந்திய தூதராக மத்திய அரசு நியமனம் செய்து உள்ளது. விரைவில் இந்த பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.