செய்திகள்
கவர்னரை அழைக்காமல் சட்டசபையை நடத்திய மேற்கு வங்காள அரசு
மேற்குவங்காள அரசு ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்திற்கு ஆளுநரை அழைக்காமல், கூட்டத்தை நடத்தியதால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மேற்கு வங்காள மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மம்தா பானர்ஜிக்கும், அம்மாநில ஆளுநருக்கும் இடையில் எப்போதுமே மோதல் போக்கு இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று இந்த ஆண்டுக்கான முதல் சட்டசபை கூட்டம் தொடங்கியது. வழக்கமாக முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் நடைபெறும். ஆனால் மேற்கு வங்காள ஆளுநருக்கு அழைப்பு விடுக்காமல் அம்மாநில சட்டசபை இன்று கூடியது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜனதா எல்.எல்.ஏ.-க்கள் அமளியில் ஈடுபட்டனர். மேலும் இடது சாரி கட்சிகள், காங்கிரஸ் சட்டசபை கூட்டத்தை புறக்கணித்தனர்.