இந்தியா
பா.ஜனதா அதிக இடங்களை பெற்று ஆட்சி அமைக்கும்: உத்தரகாண்ட் முதல்வர் சொல்கிறார்
உத்தரகாண்டில் பா.ஜனதா அதிகமான இடங்களை பிடிக்கும் என்றாலும் போட்டி கடுமையாக இருக்க வாய்ப்பு இருப்பதாக தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. அதன்பின், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு வெளியிடப்பட்டது.
70 தொகுதிகளை கொண்ட உத்தரகாண்டில் பா.ஜனதா அதிக அடங்களை பிடிக்கும் என பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில் தெரிவித்தாலும், சில கருத்துக் கணிப்புகள் போட்டி கடுமையாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தமி ‘‘அதிகப்படியான கருத்து கணிப்புகள் பா.ஜனதா ஆட்சி அமைக்கும் என கணித்தள்ளது. வெற்றிபெறும் இடங்களின் எண்ணிக்கை சற்று குறைந்தாலும் பிரச்சனை இருக்காது எனத் தெரிவித்துள்ளது. ஆனால் நாங்கள் அதிக இடங்களை பிடிப்போம். தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியை அமைப்போம். பா.ஜனதாவின் சேவைக்கு மாநில மக்கள் சான்றிதழ் அளித்துள்ளனர்’’ என்றார்.
நாளைமறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெற இருக்கிறது.