இந்தியா
ராணுவத் தளபதி நரவானே

எதிர்காலப் போர்களில் உள்நாட்டு ஆயுதங்களை பயன்படுத்த வேண்டும் - ராணுவத் தளபதி நரவானே பேட்டி

Published On 2022-03-08 22:49 IST   |   Update On 2022-03-08 22:49:00 IST
முப்படைகளில் சிறப்பான சாதனை படைத்தவர்களுக்கு நினைவுப் பதக்கங்களை அவர் வழங்கினார்.
இந்திய தரைப்படை, கடற்படை மற்றும் விமானப்படையில், சிறப்பான சாதனை புரிந்தவர்களுக்கு மேக்ரிகோர் நினைவுப் பதக்கத்தை, முப்படைத்  தளபதிகள் குழுவின் தலைவராக இருக்கும் ராணுவத் தளபதி ஜெனரல் எம்.எம்.நரவானே இன்று வழங்கினார். 

இந்த விருது வழங்கும் விழா, ஐக்கிய சேவை நிறுவனத்தில் (யுஎஸ்ஐ)  நடந்தது. இதில் முப்படைகளைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.



மேக்ரிகோர் நினைவுப் பதக்கம் கடற்படையில் பல சாதனைகள் படைத்த அதிகாரி சஞ்சய் குமாருக்கு வழங்கப்பட்டது. 

ராணுவத்தில் பணியாற்றும் நயிப் சுபேதார்  சஞ்சீவ் குமார் ஹேங் கிளைடரில் 8 மணி நேரம் 43 நிமிடங்கள் பறந்து புதிய உலக சாதனை படைத்தார். அவருக்கும் மேக்ரிகோர்  பதக்கம் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய ஜெனரல் நரவானே, ராணுவ பாரம்பரியப்படி சாகசப்  பயணங்களை ஏற்பாடு செய்யும் யுஎஸ்ஐ அமைப்பைப் பாராட்டினார். சிறப்பான சாதனை படைத்து விருது வென்றவர்களையும் அவர் பாராட்டினார். 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். எதிர்காலப் போர்களில் உள்நாட்டு ஆயுதங்களைக் கொண்டு போராட நாம் தயாராக இருக்க வேண்டும் என்று கூறினார்.

Similar News